கணினியில் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் அதில் ஒரு முக்கியமான விஷயம் அந்த கணினியின் ஐபி முகவரி.
பல நேரங்களில் உங்களுக்கு இந்த அமைப்பின் உதவி தேவைப்படலாம். உதாரணமாக ஒரு சில இயந்திரங்களை உங்கள் கணினியுடன் இணைக்கும் போது இந்த ஐபி முகவரி தேவைப்படும்.
உங்கள் நிறுவனத்திற்கு ஒரு பயோ மெட்ரிக் எந்திரத்தை நிறுவும் பொழுது அந்த எந்திரம் கணினியுடன் இணைந்து செயல்பட இந்த ஐபி முகவரி தேவைப்படும்.
எனவே இந்த ஐபி முகவரியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.
உங்கள் கணினியை கணினியில் கீழே உள்ள விண்டோஸ் பட்டனை கிளிக் செய்து வரும் சர்ச் பாரில் "CMD" என்று உள்ளிடவும்.
பின்பு இவ்வாறு ஒரு Command Prompt பெட்டி திரையில் தோன்றும். இதில் "ipconfig" என்று நீங்கள் டைப் செய்ய வேண்டும்.
அவ்வாறு டைப் செய்யும் பொழுது. பின்வருமாறு உங்கள் ip Address திரையில் பின்பு ஒருவாறு காண்பிக்கும்.