இது ஏற்கனவே இருக்கும் வாட்ஸ் அப் குரூப் போன்ற ஒரு அம்சம் தான். ஆனால் வாட்ஸ் அப் குரூப்பில் இல்லாத பல விஷயங்களை சேனல் மூலம் செய்ய முடியும்.
யூட்யூபில் உள்ளது போலவே நீங்கள் ஒருவருடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாலோ செய்ய முடியும்.
மேலும் இந்தியாவில் இன்னும் பலருக்கு சேனல் கிரியேஷன் வசதி அளிக்கப்படவில்லை. தற்போது பல பேருக்கு சேனல்களை ஃபாலோ செய்யும் வசதி மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய வாட்ஸ்அப் சேனல் அம்சத்தை பிரபலப்படுத்த மெட்டா நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பாலிவுட் பிரபலங்களுடன் கூட்டுச் சேர்ந்து அவர்களுக்கான சேனல்களை உருவாக்கி அவர்களை பாலோ செய்யும் ஆப்ஷனை நமக்கு தருகிறது.
மேலும் அனைவரின் கைகளிலும் இந்த whatsapp சேனல் கிரியேஷன் வசதி வரும் பொழுது இன்னும் பல விதங்களில் நமக்கு whatsapp சேனல்கள் பற்றிய கூடுதல் அம்சங்கள் தெரியவரும்.
கூடுதல் தகவல்: வாட்ஸ் அப்பில் தற்போது அறிமுகப்படுத்தும் இந்த சேனல் அம்சமானது. பல வருடங்களாக டெலகிராம் செயலியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.