மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டிம் குக் புதன்கிழமை 15.12.2021 அன்று ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்ப வேண்டிய தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பது போல் கூறி உள்ளது.
மேலும் அனைத்து ஊழியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர்களை பெற ஊக்குவித்து செய்தியை அறிவித்துள்ளார்.
மேலும் அந்த செய்திக் குறிப்பில் குக் கூறுகையில் பல நாடுகளில் எங்கள் அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. அதில் உள்ள பல ஊழியர்கள் தவறாமல் அலுவலகத்திற்கு வருகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எங்கள் முடிவுகள் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் தொடர்ந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில் டிம் குக் அந்தக் கடிதத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் 1000 டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளார்.