Adsence

இனி எதையும் சுமக்க தேவையில்லை. ஹுண்டாயின் MobED ரோபோ.

தென்கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நாம் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான கார் தயாரிப்பு   நிறுவனம்.

அந்த நிறுவனம் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக CES 2022-ல் MobED என்ற நான்கு சக்கர பலத்துக்கும் எந்திரத்தை தயாரித்துள்ளது. மேலும் இது மிகச் சிறிய அளவிலும் அனைத்து பார்சலும் எடுத்துச் செல்லும் நவீன ரிக்ஷாக்கள் போல் உள்ளது.





MobEd என்பது ஒரு பட்டறை அல்லது கேரேஜில் உள்ள ட்ராலியில் அளவு உள்ள ஒரு ரோபோட் ஆகும். இது 67 செண்டி மீட்டர் நீளமும் 60 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது.




இதில் நான்கு 12 இன்ச் அளவு கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் காணப்படுவது போல காற்றடித்த ரப்பர் டயர்-களும், அவற்றை தனித்தனியே கட்டுப்படுத்தக்கூடிய மோட்டார்களும்  தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அதன் மையத்தை எப்போதும் சமமாக வைக்கும்படி அது பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் MobED இல் ஒரு கேமராவை யோ அல்லது திரையை யோ எடுத்துச் சென்றால் அது எப்பொழுதும் அதன் கோணத்தை சமமாக வைக்கிறது.


மேலும் அதன் தனித்தன்மையை கீழே உள்ள வீடியோவை பார்க்கும்போது உங்களுக்கு தெளிவாக புரியும்.

மேலும் இதன் பயன்பாடுகள் பலவாறாக இருந்த போதிலும் தற்போது தொழில் துறைகளுக்கு மிகுந்த சாதகம் மிகுந்த இயந்திரமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது. மேலும் இது அனைத்து விதமான பேக்கேஜிங் கை அடுத்து நகர்வதற்கும். பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வருங்காலங்களில் MobED ஆக்கிரமிப்பு செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் MobED பற்றிய விலை விவரங்கள் ஏதும் இல்லை. மேலும் உண்டாய் நிறுவனம் இந்த சாதனத்தை "மொபைலிட்டி பிளாட்பார்ம்" என்று அழைக்கிறது.

மேலும் MobED முதியவர்கள் அல்லது ஊனமுற்றவர்களுக்கான ஒரு இயக்கு வாகனமாக பயன்படுத்துவதற்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. மேலும் அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ம் உயரத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் முடியும். மேலும் இதை ஒரு இழு வாகனமாகவும் ஓய்வு வாகனமாகும் வருங்காலங்களில் பயன்படுத்த சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த வாகனத்தின் (MobED) கண்டறியப்பட்ட தற்போதைய அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கிலோமீட்டர் ஆகும். இது ஒரு எலக்ட்ரிக் வாகனமாகும். தற்போதைய கணக்குப்படி ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்தால் நான்கு மணி நேரம் ஓடக்கூடிய அளவில் இருக்கும்.

மேலும் இந்த வாகனத்தில் உள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை. மேலும் இது ஆளில்லா வாகனமாக ஓட மென்பொருள்கள் ஏதேனும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் என்ற விவரங்கள் எதுவும் இல்லை.

மேலும் இதுபோன்ற வாகன உற்பத்தியில் ஹூண்டாய் மட்டும் ஆராய்ச்சியை செய்யவில்லை என்பதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது உலக அளவில் மிகப்பெரிய கார் உற்பத்தியாளராக விளங்கும் டொயோட்டா, ஹோண்டா போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களும் இது போன்ற ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

மேலும் வீட்டு பராமரிப்பு வேலைகளுக்கும் வருங்காலங்களில் MobED போன்ற வாகனங்களை வரும் காலங்களில் பெரிய அளவில் பார்க்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் சுய ஓட்டுநர் தொழில்நுட்பம் வளரும் போது இது போன்ற பல புதிய வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.